அமெரிக்காவிலிருந்து ஜப்பான் பயணமானார் ஜனாதிபதி அநுர
ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கான விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஜப்பான் நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
ஜனாதிபதி நேற்று இரவு (25) ஜான் எஃப். கென்னடி சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜப்பான் நோக்கிப் புறப்பட்டு சென்றுள்ளார். ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி செப்டம்பர் 27 முதல் 30 வரை ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வுள்ளார்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடன் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் இந்த விஜயத்தில் இணைந்து கொண்டுள்ளார்.