அவுஸ்திரேலிய எடித்கோவன் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்ற சீனன்கோட்டை ஹிஜாஸ் ஹிராஸ் அஹமட்
பேருவளை சீனன் கோட்டை பெருகமலையைச் சேர்ந்த முஹம்மத் ஹிஜாஸ் ஹிராஸ் அஹமட் அவுஸ்ரேலியா எடித் கோவன் பல்கலைக்கழகத்தில் தத்துவ டோக்டர் (நீர் சிகிச்சை) எடித் கோவன் யுனிவர்சிட்டி டாக்டர் ஒப் பிலோஸொபி (வோடர் டிரீட்மன்ட்)
(Edith Cowan University Doctor of Philosophy) (water treatment) துறைக்கான கலாநிதி பட்டத்தை பெற்றுள்ளார்.
அவுஸ்ரேலியா பெர்த் மாநாட்டு மற்றும் கண்காட்சி மையத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின் போது இவருக்கு கலாநிதி பட்டம் வழங்கப்பட்டது.மேற்படி பல்கலைக்கழக வேந்தர் கயே மெக்மெத் Gaye mcmath இவருக்கான சான்றிதழை கையளித்தார்.
(Perth Convention and Exhibition Center)
இவர் மலேசியா ஸ்வின்பேர்ன் தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் பொறியியல் இளங்கலை (ஹானர்ஸ்)
(மெக்கானிக்கல்)
Swinburne University of information and technology Bachelor of engineering
(Honours) (Mechanical)
பட்டத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பேருவளை ஹெரோ சர்வதேச பாடசாலை மற்றும் பாணந்துறை லைசியம் சர்வதேச பாடசாலை ஆகியவற்றின் பழைய மாணவரான இவர் சீனன் கோட்டை பெருகமலையைச் சேர்ந்த வஹாப்தீன் முஹம்மத் ஹிஜாஸ் லிவாஹுத்தீன் பாத்திமா பாரிஸா தம்பதிகளின் புதல்வர் ஆவார்.




(பேருவளை பீ.எம். முக்தார்)