கல்வி உயர் கல்வி மற்றும் தொழிற் பயிற்சி அமைச்சுடன் இணைந்து கல்வி அமைச்சின் முஸ்லிம் பிரிவினால் மீலாதுன் நபி விழா
கல்வி உயர் கல்வி மற்றும் தொழிற் பயிற்சி அமைச்சுடன் இணைந்து கல்வி அமைச்சின் முஸ்லிம் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட மீலாதுன் நபி விழா காலி ,கிந்தொட ஸாஹிரா தேசிய பாடசாலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தொழில் பிரதி அமைச்சர் கெளரவ நளீன் ஹேவகே கலந்து சிறப்பித்தார்.பாடசாலை அதிபர் ஏ.எல்.ஏ. மொஹமட், வரவேற்புரை நிகழ்த்தினார்.
மேலும் கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்தி பிரிவின் பணிப்பாளர். மேஜர் என்.டி. நசுமுதீனின் பூரண வழிகாட்டலில் நடைபெற்ற இவ் விழாவில் வலயக் கல்வி பணிப்பாளர் திருமதி மதுர்சினி வாசனா உட்பட உதவி கல்விப் பணிப்பாளர்கள், பாடசாலை அதிபர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் மாணவர்களினால் கலை கலாசார நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன.



(எம்.கே.எம்.நியார் – பதுளை)