லொறி வான் மோதல்; நால்வர் பலி, மூவர் காயம்
தலாவ பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அநுராதபுரம் – குருநாகல் பிரதான வீதியில் தலாவ பகுதியில் பாரவூர்தியும், சிற்றூர்தியும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றிருந்தது.
முன்னதாக, குறித்த பகுதியில் ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்தநிலையில், தற்பொழுது மேலும் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்கா அதிகரித்துள்ளது.