பாத்திமா திக்ரா பதக்கம் அணிவிக்கப்பட்டு பாராட்டப்பட்டார்
கல்வி அபிவிருத்தி ஒன்றியம் ( EDF ), 21 ஆவது வருடமாக ஒழுங்கு செய்திருந்த, தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் தகைமை பெற்ற மாணவ மாணவிகளைப் பாராட்டி “சான்றிதழ் வழங்கி, பதக்கம் அணிவிக்கும் விழா – 2024”, கொழும்பு – 12 அல் ஹிக்மா கல்லூரியில் இடம்பெற்றது.
மேல் மாகாணம் மற்றும் தென் மாகாணத்தைச் சேர்ந்த 500 இளஞ்சிட்டுகள் பாராட்டப்பட்ட இச்சிறப்பு விழாவில், இப்பரீட்சையில் தகைமை பெற்ற களுத்துறை மாவட்ட, பண்டாரகம, அடுலுகம அல் – கஸ்ஸாலி முஸ்லிம் ஆரம்பப் பாடசாலையில் கல்வி பயிலும் எம்.எப். பாத்திமா திக்ரா எனும் மாணவியும், சான்றிதழ் வழங்கி பதக்கம் அணிவித்து பாராட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
இம்மாணவிக்கு, புகைப்படத்துடன் கூடிய “புலமைத் தாரகை” மலரும் வழங்கி வைக்கப்பட்டது.
இப்பரீட்சையில் 144 புள்ளிகளைப் பெற்றுள்ள பாத்திமா திக்ரா, அடுலுகம யைச் சேர்ந்த முஹம்மட் பைரூஸ் – ஜென்னத்துல் பாத்திமா தம்பதியினரின் புதல்வியாவார்.
( ஐ. ஏ. காதிர் கான் )