இந்திய தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்துள்ள நிகழ்வின் முக்கிய பிரமுகர்களை சந்தித்த பைசால் காசிம்
“அயலக ஆளுமைகளுக்கு அலங்காரம் ” என்ற தொனிப்பொருளில், கடந்த வெள்ளிக்கிழமை 2025.09.19 மாலை 04.00 மணியளவில், பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு வளாகத்தில் நடைபெற்றது .
இவ் விழாவில் கலந்து சிறப்பிப்பதற்கு தமிழ்நாட்டிருந்து வருகை தந்து நிகழ்வின் முக்கிய கதாநாயகராக திகழ்ந்த தமிழ் நாடு அரசின் “தகைசால் தமிழர்” விருது பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர், பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் (EX.MP)அவர்களும், மேலும் தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் , தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் , இந்திய தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு முதன்மை துணைத்தலைவர்
, பொதுச் செயலாளர் , மேனாள் சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் , சென்னை மாநகராட்சி எழும்பூர் கவுன்சிலர் மேலும் அரசியல் பீட அங்கத்தவர்கள் என இந்திய உறுப்பினர்கள் வருகை தந்தனர்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் அவர்கள் சுகாதார பிரதி அமைச்சராக பதவி வகித்த காலம் தொடக்கம் இன்றுவரை வருகை தந்த அனைத்து இந்திய பிரமுகர்களோடு நட்புறவில் உள்ளதை காட்டும் விதமாகவும்
ஒரு தசாப்த நட்புறவை கொண்டாடும் வகையிலும் வருகை தந்த 30 இந்திய உறுப்பினர்கள் மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோரை அழைத்து இவர்களுக்கான பகற்போசனத்தினை பம்பலப்பிட்டி காலிடா உணவகத்தில் ஏற்பாடு செய்தார்.



