திருகோணமலை மாவட்டத்திற்குட்பட்ட மாபெரும் கௌரவிப்பு விழா
மூதூர் அனர்த்த சமூக சேவைகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்டத்திற்குட்பட்ட மாபெரும் கௌரவிப்பு விழா மூதூர் பிராந்திய திடீர் மரண விசாரணை அதிகாரி, மூதூர் சமூக சேவைகள் நலன்புரிச் சங்கத்தின் தலைவர், மூதூர் பிரதேச முஸ்லிம் விவாக பதிவாளர் எம்.வை.லாபீர் அவர்களின் தலைமையில் (21.09.2025) மூதூர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை, சட்டத்தரணி எம்.ஏ.எம். முஜீப், மூதூர் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் திரு. செல்வரத்திணம், கின்னியா பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஏ.ஆர்.எம். அஸ்மி, மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல். சிறாஜ், கின்னியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம். கணி மற்றும் உயர் அதிகாரிகளும், முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது 9A சித்திகளை பெற்ற 200 மாணவர்கள், அல் குர்ஆனை மனனம் செய்த 100 ஹாபிழ் மாணவர்கள், 2025ம் ஆண்டு தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள், பிரதேச சபையின் கௌரவ தவிசாளர்கள், கௌரவ உறுப்பினர்கள் மற்றும் 30 உயர் அதிகாரிகள், சமூக சேவையாளர்களும் கௌரவிக்கப்பட்டனர்.




(கே .எ. ஹமீட்)