ஓட்டமாவடி பிரதேச சபையில் கௌரவிப்பு நிகழ்வு
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை ஏற்பாடு செய்த கௌரவிப்பு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (21) சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
உள்ளூராட்சி வார இறுதிநாளை முன்னிட்டு இந்நிகழ்வு பிரதேச சபையின் தவிசாளர் எம்.எச்.எம்.பைறூஸ் தலைமையில் இடம்பெற்றது.
இதில், உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு பிரதேச சபை நடாத்திய நிகழ்வுகளில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்திய பாடசாலை மாணவர்கள், அரபுக் கல்லூரி மாணவர்கள், முன்பள்ளி மணவர்கள் ஆகியோர்களுக்கு நினைவுச்சின்னங்கள், சான்றிதழ்கள், நினைவுப் பரிசில்கள் ஆகியவை வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலக செயலாளர் ஏ.தாஹிர் கலந்து கொண்டதுடன், ஏனைய அதிதிகளாக ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளர் எஸ்.ஏ.அமீர், ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர்களான அலி அன்சார், லத்தீப் மற்றும் வாகரை பிரதேச சபை உறுப்பினர் எம்.பி.எம்.ஹைதர், ஓய்வு பெற்ற வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எல்.ஏ.ஜுனைத், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதேச சுற்றாடல் உத்தியோகத்தர் ஏ.ஜே.எம்.முயீஸ், பொதுச் சுகாதார பரிசோதகர், என்.எம்.சியாம், மீராவோடை அல் ஹிதாயா வித்தியாலய அதிபர் எம்.ஏ.சீ.எம்.அஜ்மீர் உட்பட சபையின் உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.




(எச்.எம்.எம்.பர்ஸான்)