இன்று அமெரிக்கா பயணமாகிறார் ஜனாதிபதி அநுர
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (22) இரவு அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் மற்றும் பல உலகத் தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.
நாளை மறுதினம் (24) இலங்கை நேரப்படி, 3.15 மணிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்.
மேலும் அமெரிக்கா வாழ் இலங்கையர்களையும் சந்திக்கவுள்ளார்.
இவ் விஜயத்தின்போது வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறைஅமைச்சர் விஜித ஹேரத்தும் இணைந்துகொள்வார் என தெரிவிக்கப்படுகிறது.