ஆலங்குடா உலமாக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குர்ஆன் மத்ரஸா மாணவர்களுக்கிடையிலான போட்டி நிகழ்ச்சி
கற்பிட்டி ஆலங்குடா உலமாக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குர்ஆன் மத்ரஸா மாணவர்களுக்கிடையிலான போட்டி நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை (21) ஆலங்குடா பாடசாலையில் இடம் பெற்றது.
நபி அவர்களின் பிறந்த மாதத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இப் போட்டி நிகழ்ச்சிகள் 10 பிரிவுகளில் ஒன்பது அல்குர்ஆன் மதரஸாக்களை பிரதிநிதித்துவப்படுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இப் போட்டி நிகழ்ச்சியின் நடுவர்களாக
கற்பிட்டி மஜ்லிஸுல் உலமா சங்கத்தின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.என்.எம்.ஷிபான் (ஹாஸிமி), செயலாளர் மௌலவி எம்.டீ.ரிப்கான் (ரஹ்மானி)
மேலும் அஷ்ஷெய்க் அப்ரார் (ரஷாதி), அஷ்ஷெய்க் இம்ரான்(ரஹ்மானி), அஷ்ஷெய்க் இல்ஹாம் (ஐன்னதி)
அஷ்ஷெய்க் ஸப்வான் (ரஷீதி) ஆகியோர் கடமையாற்றினார்கள்.
குறித்த இப்போட்டியில் கலந்து கொண்ட அனைத்து அல்குர்ஆன் மத்ரஸா மாணவர்கள் உட்பட ஒவ்வொரு பிரிவிலும் முதல் ஐந்து இடங்களை பெறுகின்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் ஒக்டோபர் 05 ம் திகதி நடைபெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)