அறுவை சிகிச்சை நுண் பொருட்கள் அனுராதபுரம் ஆஸ்பத்திரிக்கு கையளிப்பு
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சிறுநீரக சிகிச்சைப் பிரிவில் இரத்தச் சர்க்கரைக் குறைப்பு சிகிச்சைக்கு உட்படுத்தப்படும் நோயாளிகளுக்கு தேவையான அறுவை சிகிச்சை நுன்பொருட்கள் வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச தலைமையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளது.
அனுராதபுரம் சிறுநீரக நோய் பராமரிப்பு அறக்கட்டளையினால் இந்த உபகரணம் வழங்கப்பட்டது.இதன் பெறுமதி 260000 ரூபாய் ஆகும். அனுராதபுரம் சிறுநீரக நோய் பராமரிப்பு திட்டத்தின் தலைவர் அனுராதபுரம் அட்டமஸ்தானாதிபதி கலாநிதி பல்லேகம ஹேமரத்ன தேரரின் வேண்டுகோளின் பேரில் அனுராதபுரம் சிறுநீரக பராமரிப்பு அறக்கட்டளை தலைவர் இந்த உபகரணங்களை வழங்கி வைத்தார்.
ரஜரட்ட பகுதியில் பொதுவாக காணப்படும் கண்டறியப்பட்டாத சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட ஏராளமான கிராமப்புற விவசாயிகள் இந்த சிறுநீரகப் பிரிவில் தினமும் சிகிச்சை பெற்று வருகின்றனர். சராசரியாக ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 100 நோயாளிகள் இந்தப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பிரிவில் ஒரே நேரத்தில் 30 நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கக்கூடிய வசதிகள் உள்ளன. இவர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று முறை டயாலிசிஸ் செய்யப்படுகிறது.
(எம்.ரீ.ஆரிப் – அநுராதபுரம் செய்தியாளர்)