புளிச்சாக்குளம் உமர் பாரூக் மாணவிஅகில இலங்கை தமிழ் மொழி தின போட்டியில் தேசிய மட்டத்தில் முதலிடம்
கொழும்பில் சனிக்கிழமை (20) நடைபெற்ற அகில இலங்கை தமிழ்மொழி தினப் போட்டியில் “திறனாய்வுப் போட்டி நிகழ்வில்” தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தை புளிச்சாக்குளம் உமர் பாருக் மகா வித்தியாலய மாணவி ஜீ.தரண்யா பெற்று பாடசாலை வரலாற்றில் சாதனை படைத்துள்ளார்.
குறித்த மாணவிக்கும் மாணவியை வழிகாட்டி தேசிய மட்டம் வரை அழைத்துச் சென்ற தமிழ்ப்பாட பொறுப்பாசிரியை ஏ.சுலைஹாவிற்கும் பாடசாலை சமூகம் சார்பாக தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் பாடசாலை அதிபர் எம்.யூ.எம்.சாஜஹான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)