உஸ்வா அகதிய்யா பாடசாலையின் கலை நிகழ்வுகள்
அன்னலார் முஹம்மது நபியவர்களின் பிறந்த தினத்தினை முன்னிட்டு சென்றல் கேம்ப் உஸ்வா அகதியா பாடசாலையின் அதிபர் எம்.எம்.தௌபீக் தலைமையில் கலை நிகழ்ச்சிகள் (21) இடம்பெற்றது.
பாடசாலை மாணவர்களின் கலை கலாசார நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடைபெற்ற இவ்விழாவில் நாவிதன்வெளி பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் அஸீம், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர்களான ஐ.எல். எம்.நவாஸ், எம்.ஏ.நளீர், எம்.பி.லத்தீப், முன்னால் அதிபர் வை.பி.ஏ.சுல்தான், ஜீ.எம்.எம்.பாடசாலையின் அதிபர் வி.ஸம் ஸம் ஆகியோர் விஷேட அதிதிகளாக கலந்து கொண்டதுடன் ஊடகவியலாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பள்ளிவாசல் தலைவர் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் சின்னஞ் சிறார்களின் கலை நிகழ்ச்சிகள், ஹஸீதா மற்றும் நாடகம், உரையாடல் போன்ற பல நிகழ்வுகள் இடம்பெற்றது.
நிகழ்வில் அதிதிகளின் உரை இடம்பெற்றதோடு, அஹதிய்யா பாடசாலையின் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துரைத்தார்கள். மார்க்க கல்வி விடயங்களில் பெற்றோர்களின் பங்கு மிக முக்கியமானது என்றும் மாணவர்கள் அதிக அக்கறையுடன் மார்க்க கல்வியை கற்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து கற்பித்த ஆசிரியர்களுக்கு நினைவுச்சின்னம் வழங்கி வைக்கப்பட்டதோடு கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
















(ஏ.எச்.எம். ஹாரீஸ்- மத்திய முகாம்)