மாவனல்லை பதுரியாவில் “Peak of Baduriya” வின் ஆரம்ப நிகழ்வு
மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரியின் ஐந்து ஆண்டுக்கால அபிவிருத்தி திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு “Peak of Baduriya” எனும் தலைப்பில் அக் கல்லூரி அதிபர் ஏ. எல். ஏ. ரஹ்மான் தலைமையில் கனேதன்னை அவானி மண்டபத்தில் நடைபெற்றது.
இப் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவியர் சங்க உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர் குழாம் உட்பட அனைவரும் ஒன்றிணைந்து நடாத்திய இந் நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கைக்கான மலேசிய நாட்டின் உயர்ஸ்தானிகர் பத்லி ஹிசாம் ஆதம் மற்றும் மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம். சாருடீன் ஆகியோர் விசேட அதீதிகளாகவும், சிறப்பு அதிதிகளாக மௌலவி எம்.ஜே. அஹமட் ஹுஸைன், எம். எம். எம். வதூத் , ஏ.எஸ்.ஏ. அஸ்ஹர்,எம். ஆர். எம். யாஸீர் அரபாத், அஸாம் அமீர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.






(பாரா தாஹீர்- மாவனல்லை)