காஸா மக்களின் விடிவுக்காக அனைத்துப் பள்ளிகளிலும் ஐவேளை தொழுகையிலும் குனூத் துஆ ஓதுமாறு அ.இ. ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள்
பலஸ்தீன் – காஸாவில் சுமார் 23 மாதங்களாக தொடர்ந்து நடாத்தப்பட்டு வரும் மனிதாபிமானமற்ற தாக்குதலில் இன்று வரை 65,000 க்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் உயிரிழந்தும், 164,264 க்கும் மேற்பட்டோர் காயமுற்றும் உள்ளனர்.
எனவே, அப்பகுதியில் தற்போது இடம் பெற்றுவரும் கொடூரமான தாக்குதல் நிறுத்தப்படவும் அமைதி, சமாதானம் மற்றும் நீதி நிலை நாட்டப்படுவதற்கும் அனைத்து மஸ்ஜித்களிலும் பஜ்ர் தொழுகையில் ஓதக்கூடிய குனூத்துடைய துஆவை ஐவேளைத் தொழுகைகளில் மஃமூம்களுக்கு சடைவில்லாமல் மறு அறுவித்தல் வரை ஓதிவருமாறும் அதில் பின்வரும் துஆக்களை சேர்த்துக் கொள்ளுமாறும் மஸ்ஜிதுடைய இமாம்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது.
அத்துடன் தொழுகை, நோன்பு, ஸதகா, தௌபா மற்றும் இஸ்திஃபார் போன்ற நல்லமல்களைச் செய்வதில் கூடிய கவனம் செலுத்தி துஆப் பிரார்த்தனையில் ஈடுபடுமாறும் அனைத்து முஸ்லிம்களையும் ஜம்இய்யா கேட்டுக் கொள்கிறது.
اللَّهُمَّ اكْتُبِ الأمْنَ والسَّلَامَةَ عَلَى العِبَادِ والبِلَادِ خَاصَّةً فِيْ فِلَسْطِيْنَ
اللَّهُمَّ احْرُسْهُم بِعَيْنِكَ الَّتِي لَا تَنَام، وَاكْنُفْهُم بِرُكْنِكَ الَّذِي لَا يُرَام، وَاحْفَظْهُم بِقُدْرَتِكَ عَلَيْهِم، وَأَنْتَ رَجَاؤُنَا وَرَجَاؤُهُم.
اللَّهُمَّ حَرِّرِ الْمَسْجِدَ الأَقْصَى مِنْ كَيْدِ الغَاصِبِيْنَ وَالظَّالِمِيْنَ
اللهُمَّ اكْفِنَا شَرَّ الظَّالِمِينَ
اللَّهُمَّ إنَّا نَجْعَلُكَ في نُحُورِهِمْ وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ
اللهُمَّ اكْفِهِمْ بِمَا شِئْتَ يَا رَبَّ الْعَالَمِيْنَ
முஃப்தி எம்.ஐ.எம். ரிழ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்ஷைக் எம்.டி.எம். ஸல்மான்
பதில் செயலாளர், பத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா