காத்தான்குடி உள்ளூர் எழுத்தாளர்களின் புத்தக கண்காட்சி
உள்ளுராட்சி வாரம் மற்றும் தேசிய வாசிப்பு மாதத்தையொட்டி வளமான நாடு அழகான வாழ்க்கை மறுமலர்ச்சிக்காக வாசிப்போம் எனும் தொனிப்பொருளின் காத்தான்குடி நகர சபையின் ஏற்பாட்டில் உள்ளூர் எழுத்தாளர்களின் புத்தகக் கண்காட்சி நேற்று வெள்ளிக்கிழமை(19) காத்தான்குடி பொது நூலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் காத்தான்குடி நகர சபையின் செயலாளர் திருமதி றினோசா முப்லிஹ், கணக்காளர் ஏ.எஸ். மனாசிர் அஹ்ஸன்,பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்
ஐ.எல்.எம்.மாஹிர்,காத்தான்குடி நகர சபை பொது நூலகத்தின் நூலகர் திருமதி பௌமியா சறூக் மற்றும் பொது நூலக ஊழியர்கள், பாலர் பாடசாலை ஆசிரியர்கள் , பாடசாலை மாணவர்கள், வாசகர்கள், எழுத்தாளர்கள் என பலரும் கலந்துகொண்டு புத்தகங்களை பார்வையிட்டனர்.








(எம்.பஹத் ஜுனைட்)