உள்நாடு

பெருந்திரளானோர் முன்னிலையில் அயலக ஆளுமைகளுக்கு மகுட விழா

அயலக ஆளுமைகளுக்கு அலங்காரம் முனீருல் மில்லத்திற்கும் இசை முரசுக்கும் மகுட விழா நேற்று 19.09.2025 வெள்ளிக்கிழமை பி.ப.04.மணிக்கு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு வளாக நடைபெற்றது.

இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் இருந்து 40க்கும் மேற்பட்ட இந்திய யூனியன் உறுப்பிணர்கள் பாராளுமன்ற உறுப்பிணர்கள் மாணவ அமைப்பின் தலைவர் , மூத்த உறுப்பிணர்களும் கலந்து கொண்டனர்.

இத் துாதுக்குழுவினர்கள் நேற்று 19. காலை பிரதம மந்திரியை அவரது அலுவலகத்தில் வைத்து முன்னாள் அமைச்சர ரவுப் ஹக்கீமோடு சந்தித்தனர்.
பேராசிரியர் காதர் மொஹிதீன்
தமிழ் நாடு தகைசால் தமிழர் விருது பெற்றார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசியத் தலைவர் முனீருல் மில்லத பேராசிரியர் கே.எம். காதர் மொஹகிதீன் முன்னாள் எம்.பி. அவர்களுக்கான பாராட்டு விழாவில்

பிரதி சபாநாயகர் டாக்டர் றிஸ்வி யூசுப், ஹனீப் யூசுப், மேல் மாகாண ஆளுநர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் பா.உ, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுத்தீன் பா.உ, தலைவர் முஸ்லிம் மீடியா போரத்தின் கலாபூஷனம் என்.எம்.அமீன்
இசை முரசு மர்ஹூம் ஈ.எம். ஹனிபா பிறந்த நுாற்றாண்டு நினைவேந்தல் தீனிசை பாடல் அரங்கம் நடைபெற்றது. 25 க்கும் மேற்பட்ட ஈ.எம். ஹனிபாவின் பாடல் நேரடியாக இந்திய, இலங்கை பாடகர்களால் மிகத் திறமையாக அவரின் குரலை ஒத்தவாறே அரங்கில் இறையன்பன் குத்துாஸ், கலைக்கமால், தமிழ்மாமனி தேரிழந்துார் தாஜூதீன், மருதமுனை கமால் ,மொயினா மொஹிதீன் பேக் ஆகியோரினால் பாடப்பட்டது.

தமிழ் நாடு பாராளுமன்ற உறுப்பிணர் நவாஸ் கனி , மனோகனேசன், எம்.ஏ சுமந்திரன், செந்தில் தொண்டமான், நீதியரசர் அக்பர் அலி, பாத்திமா முஸப்பர் ,
ஆளுநர் ஷா நவாஸ் தமிழ் நாடு சட்ட மன்ற உறுப்பிணர், கே.ஏ.எம். முஹம்மது அபுபக்கர் முன்னாள் எம்.பி, உட்பட இந்திய முஸ்லிம் யூனியன் இளைஞர் மாணவ அமைப்பு என 40க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொள்கின்றனர்.

(அஷ்ரப் ஏ சமத்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *