வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு இரு தேசிய விருதுகள்
உலக நோயாளர் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு 2025ம் ஆண்டு தேசிய ரீதியில் நடைபெற்ற போட்டி நிகழ்வில், இலங்கை சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட இரண்டு தேசிய விருதுகளை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை பெற்றுக்கொண்டுள்ளது.
குழந்தைகள் பிரிவின் மருந்துப்பாதுகாப்பு, படுக்கை அமைப்பு மேம்பாடு மற்றும் பாதுகாவலர்களின் பங்குபற்றலை வலுப்படுத்தியதற்காகவும் இவ்விருதுகள் வழங்கப்பட்டன.
இச்சாதனையை சாத்தியமாக்கிய சிறுவர் வைத்திய நிபுணர் டாக்டர் வீ.விஜயகாந்தின் பங்களிப்பு, வழிகாட்டுதல் மற்றும் ஆதரவிற்கும் தர மேலாண்மை பிரிவின் வைத்தியர் டாக்டர் ஆர்.ருக்ஷானி, தாதிய உத்தியோகத்தர் திருமதி ஆர்.ஶ்ரீபிரசன்னா மற்றும் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திருமதி ஏ.ஹரிஹரன் ஆகியோரின் முயற்சி, பங்களிப்பிற்கும் ஆலோசனைகள் வழங்கி உறுதுணையாக இருந்த மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆர்.முரளீஸ்வரன், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை தர மேலாண்மை பொறுப்பு வைத்தியருக்கும் மற்றும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் பணியாளர் குழுவுக்கும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எஃபி.பி.மதன் பாராட்டுகளையும் மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.



(எஸ்.எம்.எம்.முர்ஷித்)