உள்நாடு

புத்தளம் ஷவ்வாபிற்கு ஒரே மேடையில் இரு கெளரவிப்புகள்

புத்தளத்தைச் சேர்ந்த முஹம்மது ரிபாயிஸ் முஹம்மது ஷவ்வாப் மும்மொழிகளிலும் சேவை புரியும் திறனோடு, புத்தளத்தின் முதலாவது Certified Trainer in Human Talent Development ஆகவும் புத்தளத்தின் மற்றுமோர், தொழில் வழிகாட்டல் ஆலோசகராகவும் (Career Counselor) உத்தியோக பூர்வ அங்கீகாரத்தையும் அண்மையில் (19) பெற்றுக்கொண்டார்.

சிலோன் கெரியர் கயிடன்ஸ் எசோசியேசன் (CCGA) மற்றும் இண்டஸ்ட்ரியல் எடியுகேஷன் கெம்பஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்திய பட்டமளிப்பு விழா, (19) பி.எம்.ஐ.சி.எச். இல் விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்விலேயே அவருக்கு இரு பட்டங்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன.

தனது இந்த நெடிய பயணத்தில் பெற்றோர்கள், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தினமும் உறுதுணையாக இருந்த சமூகத்தின் அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் ஷவ்வாப் தெரிவித்துள்ளார்.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *