பிரதமர் ஹரிணிக்கு டில்லி பல்கலைக்கழகத்தில் கெளரவ கலாநிதி பட்டம்
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வுக்கு டில்லி பல்கலைக்கழகத்தில் கௌரவ கலாநிதி பட்டம் வழங்கப்படவுள்ளது.
புதுடில்லி இந்துக் கல்லூரியின் பழைய மாணவியான பிரதமர் ஹரிணி அமரசூரிய எதிர்வரும் அக்டோபர் மாத மத்தியில் இந்தியாவுக்கு விஜயம் செய்யும் தருணத்திலேயே இந்த கௌரவ கலாநிதி பட்டம் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார்.
அக்டோபர் மாத நடுப்பகுதியில் பிரதமர் இந்தியாவுக்கு உத்தியோகப் பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். மேலும் அக்டோபர் 17, 18 ஆம் திகதிகளில் பிரதமர் புதுடில்லி செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.