கிரிக்கெட் நட்சத்திரம் துனித் வெல்லாலகேயின் தந்தை காலமானார்
இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் சகலதுறை வீரரான துனித் வெல்லாலகேயின் தந்தையும், முன்னால் கிரிக்கெட் வீரருமான சுரங்க வெல்லாலகே நேற்று இரவு காலமானார்.
அவர் தனது 54 வயதில் திடீர் மாரடைப்பு காரணமாக காலமானதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்றைய தினம் 17ஆவது ஆசியக் கிண்ண ரி20 தொடரின் தீர்க்கமான போட்டியில் இலங்கை அணி ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடியிருந்தது.
இதில் துனித் வெல்லாலகே இலங்கை பதினொருவர் அணியில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் போட்டி நிறைவடைந்த உடன் தந்தையின் மரணச் செய்தி இளம் சகலதுறை நட்சத்திர வீரரான துனித் வெல்லாலகேவிற்கு ஒத்திவைக்கப்பட்டதுடன் அவர் உடனடியாக விமானம் மூலம் இன்று அதிகாலை இலங்கையை வந்தடைந்தார்.