கம்பஹா ஒன்றிணைந்த நீர் வழங்கல் திட்டம் இன்று ஆரம்பம்
கம்பஹா, அத்தனகலை,மினுவாங்கொடை ஒன்றிணைந்த நீர்வழங்கல் இன்று (18) ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
அமைச்சர்களான விஜித ஹேரத், அருண கருணாதிலக, பிரதியமைச்சர் சரத் மற்றும் இலங்கைக்கான சீன நாட்டுத் தூதுவர் ஸிஜான் ஹொங் ஆகியோர் பங்கேற்புடன் இதற்கான நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
இத் திட்டத்தின் கீழ் இப்பிரதேசத்திலுள்ள 102,000 குடும்பங்களுக்கு சுத்தமான பாதுகாப்பான குடிநீரை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சீன அபிவிருத்தி வங்கி மற்றும் அரச நிதியையும் பயன்படுத்தி இத் திட்டம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.
(பீ.எம்.முக்தார்)