பேருவளை சீனங்கோட்டை சாவியா லேன் நவீன முறையில் புனரமைக்கப்பட்டு திறந்து வைப்பு
பேருவளை நகரசபைக்குற்பட்ட சீனங்கோட்டை பாஸிய்யா பெரிய பள்ளிவாசலுக்கு அருகாமையிலுள்ள சாவியா லேன் வீதி புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு பேருவளை நகர பிதா மபாஸிம் அஸாஹிர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
சாவியா லேன் பிரதேச வாசிகளும், சமூக சேவையாளரும் மனித உரிமைகள் அமைப்பின் அங்கத்தவருமான மொஹம்மட் பாயிஸினதும் வேண்டுகோளின் பேரில் நகர பிதா மபாஸிம் அஸாஹிர் துரித கெதியில் புனர் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டார்.
பேருவளை நகர சபை முன்னால் தலைவரும் தற்போதைய உருப்பினருமாகிய அல்-ஹாஜ் மஸாஹிம் மொஹம்மட் உட்பட நகர சபை உருப்பினர்கள், சாவியா லேனைச் சேர்ந்த முர்ஸி ஹாஜியார், ஹிகாம் ஹாஜியார், எம்.எல்.எம். பௌமி ஹாஜியார், எம். காஸிம் அனஸ், மொஹமட் மர்ஸூக், மொஹமட் ரிபாகத் மற்றும் சமூக சேவையாளரும் மனித உரிமை அமைப்பின் உருப்பினருமான மொஹம்மட் பாயிஸ் உட்பட மற்றும் பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டன.
நீண்ட காலத்திற்கு பின்னர் இந்த வீதியை புனரமைக்க நடவடிக்கை மேற்கொண்டமைக்காக பிரதேச வாசிகள் நகரபிதா மபாஸிம் அஸாஹிர் உட்பட நகர சபை உருப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.
நகர பிதா மபாஸிம் அஸாஹிர் இதன் போது கருத்து தெரிவித்ததாவது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் பேருவளை பிரதேசத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த அரசாங்கத்தினதும் இந்த அரசாங்கத்தின் ஆட்சியிலும் நகர சபை ஆட்சியிலும் பேருவளை நகர சபை பகுதி வாழ் மக்களுக்கு சிறப்பான சேவைகளை பெற்றுக்கொடுப்போம்.
கடந்த உள்ளூராட்சி தேர்தலில் நாம் மக்கள் முன் வைத்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம். தென் இலங்கையில் துரித அபிவிருத்துயும் அழகு மிகு நகரமாகவும் பேருவளையை மாற்றி அமைப்பதே எமது பிரதான இலக்காகும். எமது அபிவிருத்தி செயற் திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுக்க பிரதேச வாழ் மக்கள் பூரணமாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
நகர சபைப்பகுதியில் குன்றும் குழியுமாக காணப்பட்ட வீதிகளின் புணரமைப்பு வேளைகள், வடிகான்கள் சுற்றிகரிப்பு வேளைகள் துரிதமாக இடம்பெறுகிறது. குப்பை கூழங்கள் முறையாக அகற்றப்படுகின்றது, வத்திமராஜபுர கால்வாய் புனரமைப்பு வேளைகள் இடம் பெறுகிறது.
இன்று சீனங்கொட்டையின் முக்கிய வீதிகளின் ஒன்றான சாவியா லேன் வீதியை புனரமைத்து திறந்து வைக்கப்படுவதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.
முன்னால் நகர பிதா மஸாஹிம் மொஹமட் நகர பிதா மபாஸிம் அஸாஹிரின் வேளைத்திட்டங்களை பாராட்டியதோடு நகர வாசிகள் இந்த நகர பிதாவின் மூலம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.



(பேருவளை பீ.எம். முக்தார்)
