சவூதியும் பாகிஸ்தானும் இரு தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்
சவுதி அரேபியா – பாகிஸ்தான் இடையில் யாரும் எதிர்பாராத முழு ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இதன்படி இனிமேல் பாகிஸ்தான் மீது எந்தவொரு நாடு தாக்குதல் நடத்தினாலும் சவுதி அரேபியா பாகிஸ்தானுடன் இணைந்து அதை எதிர்கொள்ளும் அதே நேரம் சவுதி அரேபியா மீது எந்த நாடாவது தாக்குதல் நடத்தினால் அணு ஆயுத பலம் கொண்ட பாகிஸ்தான் சவுதியுடன் இணைந்து குறித்த நாட்டின் மீது தாக்குதல் நடத்தும் என்பது உறுதியாகியுள்ளது.
நேற்று புதன் கிழமை விசேட அரச முறைப் பயணமாக சவுதி அரேபியா சென்ற பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷரீப் – சவுதியின் பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் சல்மானுடன் குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
பாகிஸ்தான் இராணுவம் 1967ம் ஆண்டு முதல் சவுதி அரேபிய இராணுவத்திற்கு பயிற்சிகளை வழங்கி வரும் நிலையில் இந்த ஒப்பந்தம் பிராந்திய மட்டத்தில் பெரும் எதிர்பார்பை உண்டாக்கியுள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரு சிரிய யுத்தத்தில் பங்கேற்ற நிலையில் கடந்த வாரம் கத்தார் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்திய பின்னனியில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக சர்வதேச ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
கடந்த 2024ம் ஆண்டு அமெரிக்க பத்திரிக்கையாளர் பாப் உட்வர்ட் சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் சல்மானுடன் நடத்திய கலந்துரையாடலில் சவுதியிடம் அணு ஆயுதங்கள் இல்லையே? ஒரு மிகப் பெரும் யுத்தம் ஏற்பட்டால் என்ன செய்வீர்கள் எனக் கேட்ட போது, எம்மிடம் அணு ஆணுதம் இருக்க வேண்டிய தேவையில்லை.
அணு ஆணுத தாக்குதல் நடத்தும் தேவையேற்பட்டால் சகோதர நாடான பாகிஸ்தானிடமிருந்து வாங்கிக் கொள்வோம். என பதிலளித்திருந்தார். அந்த அடிப்படையில் பாகிஸ்தானிடமிருந்து தேவைப்பட்டால் அணு ஆயுதத்தை பயன்படுத்தும் நோக்கிய சவுதி அரேபியா குறித்த ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளதாக அறிய முடிகிறது.
