இலங்கைக்கான கட்டார் தூதுவரை சந்தித்தார் முன்னாள் ஊடகத் துறை மற்றும் தொலைத் தொடர்பாடல் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்
முன்னாள் ஊடகத் துறை மற்றும் தொலைத் தொடர்பாடல் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், இலங்கைக்கான கட்டார் தூதுவர் ஜாசிம் பின் ஜாபிர் ஜாசிம் அல் சொரூர் அவர்களை நேற்றுமுன்தினம் (16) சந்தித்து, கோழைத்தனமான இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு இலங்கையின் கண்டனத்தைத் தெரிவித்தார். அவ்வாறே கட்டார் அரசு மற்றும் கட்டார் மக்களுடன் இலங்கையின் ஒருமைப்பாட்டையும் தெரிவித்தார்.
இலங்கை போன்ற சிறிய நாடுகளுக்கு மிகவும் முக்கியமான, சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் பல்தரப்பு சர்வதேச ஒழுங்கைப் பாதுகாப்பதன் அவசியத்தை மையமாகக் கொண்ட நீண்ட கலந்துரையாடலிலும் இருவரும் ஈடுபட்டனர்.