உக்குவளை அஜ்மீரில் எல்லை பாதுகாப்பு மதில் கையளிப்பு நிகழ்வு
உக்குவளை அஜ்மீர் தேசிய பாடசாலையின் காணியில் நிர்மானிக்கப்பட்ட எல்லை பாதுகாப்பு மதில் இப்பாடசாலைக்கு கையளிக்கும் நிகழ்வையொட்டி விசேட கூட்டமொன்று இப்பாடசாலை அதிபர் திருமதி சகுந்தலா சிவநேசன் தலைமையில் இப்பாடசாலை மண்டபத்தில் கடந்த ஞாயிறன்று(14) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் இப்பாடசாலை பழைய மாணவியர் சங்கத்(ஓஜிஏ) தலைவியும் ஆசிரியையுமான திருமதி பரீனா கலீல் உட்பட உறுப்பினர்கள் பழைய மாணவர்கள் சங்க(ஓபிஏ) செயலாளரும் ஆசிரியருமான எம். மபாஸ் உட்பட உறுப்பினர்கள் அறிவிப்பாளர் ஆசிரியை அரூசியா உக்குவளை பிரதேசசபை பிரதி தலைவர் எம்.ராபி எதிர்க்கட்சி உறுப்பினர் எம்.நயீமுல்லா மற்றும் பாடசாலை ஆண் பெண் நலன்விரும்பிகள் முக்கிய பிரமுகர்கள் குழுவினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டதுடன் இந் நிகழ்வில் அதிபர், மற்றும் ஓஜிஏ தலைவி , ஓபிஏ செயலாளர் , அறிவிப்பாளர் ஆசிரியை அரூசியா ஆகியோரது உரைகளும் இடம்பெற்றன.
இதனையடுத்து எல்லை மதில் இப்பாடசாலைக்கு கையளிக்கும் நிகழ்வின்போது இப்பாடசாலை அதிபர் மதிலைக் குறிக்கும் பெயர்ப் பலகையைத் திரைநீக்கம் செய்துவைத்தார் அவருடன் பழைய மாணவியர்கள் சங்கத்தலைவியும் ஆசிரியையுமான திருமதி பரீனா கலீல் உட்பட ஏனையோரும் இவ்விடத்தில் கலந்துகொண்டனர்
இப்பாடசாலை பழைய மாணவியர் மாணவர்கள் சங்கங்கள் நலன்விரும்பிகள் தனவந்தர்கள் ஆகியோரது சுமார் 4.1 மில்லியன் நிதியுதவியைக்கொண்டு இப்பாடசாலையின் பாதுகாப்புகருதி நிர்மானிக்கப்பட்ட 1050 மீட்டர் நீள எல்லை பாதுகாப்பு மதில் (Boundary Wall)) நிர்மானத்துக்கு இப்பாடசாலை முன்னாள் அதிபர் எம் சரூக் கினால் அடிக்கல் நடப்பட்டது இப்பணிகளுக்காக பங்களிப்பு நல்கிய சகலருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டதுடன் இந்நிகழ்வினை பழைய மாணவியர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.
(ஜலீல் நஜீலா)