உள்நாடு

ஹொரவப்பொத்தானை பதியுத்தீன் மஹ்முத் ம வி.யில் பெண்கள் விடுதி திறப்பு.

ஹொரவப்பொத்தானை பதியுத்தீன் மஹ்மூத் மகா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பெண்கள் விடுதி   வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச தலைமையில் கடந்த (09 திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதற்காக அரசாங்கம்   ரூ 02 கோடி செலவிட்டடுள்ளது. பாடசாலையில் மிகவும் குறைபாடாகவிருந்த பெண்கள் விடுதி பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது. இந்த பாடசாலையில் கல்வி கற்பதற்காக வெகு தொலைவில் இருந்து மாணவர்கள் வருகின்றனர். மாலையில் வீடு திரும்ப வேண்டி இருந்தாலும் போக்குவரத்து வசதிகள் இல்லாமையினால் அவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

இதனால் விடுதிக்கான தேவை அதிகமாக இருந்தது.கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் இருந்து இந்த பாடசாலை 07 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. வடக்கு மாகாணத்தின் வவுனியா மாவட்டத்தில் இருந்து இந்த பாடசாலை 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ஹொரவப்பொத்தானையைச் சூழவுள்ள கிராமங்களையும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் இருந்தும் மாணவர்கள் கல்வி கற்பதற்காக இந்த பாடசாலைக்கு வருகின்றனர். அவர்களுக்கு குடியிருப்பு வசதிகள் மிகவும் தேவைப்பட்டன.இந்த விடுதியில் 50 மாணவிகள் தங்கும் வசதிகள் உள்ளன.

விடுதியைத் திறந்து வைத்ததோடு மட்டுமல்லாமல்  பாடசாலை மாணவர் அமைப்பு உறுப்பினர்களுக்கு மாகாண மதிப்பீட்டு முகாம் மாகாண சின்னம் சூட்டப்பட்டதுடன் 2025 ஆம் ஆண்டிற்கான  தலைமை மாணவ தலைவர்களுக்கு  ஆளுநர் அதிகாரபூர்வ சின்னம் சூட்டினார்.

இந்நிகழ்வில் ஹொரவப்பொத்தானை பிரதேச சபை தலைவர் தரங்க ஜயவர்தன ,அதன் உறுப்பினர்கள், ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் சமரதுங்க ஹேரத் ,இணைப்புச் செயலாளர் ஆனந்த ரத்நாயக்க , விவசாயிகள் மாகாண கல்வி பணிப்பாளர் எஸ்.எம்.டபிள்யூ.சமரகோன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *