ஹொரொவ்பொத்தானை அஹமட் இம்தியாஸ் எழுதிய இரு நூல்களின் அறிமுக விழா சனிக்கிழமை
ஹொரொவ்பொத்தானை அஹமட் இம்தியாஸ் எழுதிய சாம்பலிலும் பண்ணீர்ப்பூ என்ற கவிதைத் தொகுப்பும் தீயினுள் நீர்த்துளி என்ற சிறுகதைத் தொகுப்பும் ஆகிய இரு நூல்களின் அறிமுக விழா எதிர்வரும் சனிக்கிழமை (2025/09/20) ஹொரொவ்பொத்தானை பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் காலை 09 மணிக்கு ஓய்வு பெற்ற முன்னாள் உதவி வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எச் அப்துல்லாஹ் தலைமையில் நடைபெற உள்ளது.
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக கெக்கிராவ சுலைஹா கலந்து சிறப்பிப்பதுடன் சிறப்பு அதிதிகளாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் பாரம்பரியம் நிகழ்ச்சி தயாரிப்பாளர் எம் எஸ் எஸ் ஜின்னா, நாச்சியாதீவு பர்வின் மற்றும் விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம் பீ எம் பைரூஸ் ஆகியோருடன் இன்னும் கௌரவ அதிதிகள் பலரும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)