சகல சமூகங்களுக்குமான சமூக சேவை இயக்கத்தின் மீலாத் போட்டி பரிசளிப்பு நிகழ்வு..!
சகல சமூகங்களுக்குமான சமூக சேவை இயக்கம் ஏற்பாடு செய்த மீலாத் போட்டியில் வெற்றியீட்டியோருக்கான பரிசளிப்பு நிகழ்வும் விசேட தேவை உடையவர்களுக்கான சான்றிதழ் மற்றும் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வும் கொழும்பு அல் ஹிக்மா கல்லூரியில் இடம் பெற்றது. சங்கத்தின் தலைவர் எஸ் எச் எம் ஜிப்ரி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ப்ளூமெண்டல் பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜித் பேதுரு ஆராச்சி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சபீக் ரஜப்தீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





