உள்நாடு

சீனன் கோட்டையில் 93 ஆவது வருட புனித ஸஹீஹுல் புகாரி தமாம் மஜ்லிஸ் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை

வரலாற்றுப் புகழ்மிகு பேருவளை சீனன் கோட்டை பிட்டவளை மிர்அதுஷ் சாதுலிய்யா ஸாவியாவில் 93 ஆவது வருட புனித ஸஹீஹுல் புஹாரி மஜ்லிஸின் தமாம் வைபவம் எதிர் வரும் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை (21.09.2025) காலை ஸாவியாவின் பிரதம இமாம் அல் ஹாஜ் கலீபதுஷ் ஷாதுலி மௌலவி எம்.எம். ஸெய்னுலாப்தீன் (பஹ்ஜி) தலைமையில் நடைபெறும்.

சீனன் கோட்டை பள்ளிச் சங்க இணைச் செயலாளரும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினருமான கலீபதுஷ் ஷாதுலி அஷ் ஷெய்க் அல் ஹாஜ் இஹ்ஸானுத்தீன் அபுல் ஹஸன் (நளீமி) விஷேட சொற்பொழிவாற்றுவார்.

இலங்கைக்கான ஷாதுலி தரீக்காவின் கலீபதுல் குலபா சங்கைக்குறிய அல் உஸ்தாத் மௌலவி அல் ஹாஜ் எம்.இஸட். முஹம்மத் ஸர் (பாரி) கலீபதுஷ் ஷாதுலி மௌலவி எம்.எம். ஸெய்னுலாப்தீன் (பஹ்ஜி) ஆகியோர் துஆப் பிராத்தனை நடாத்துவர்.

செப்டம்பர் 20ஆம் திகதி அஸர் தொழுகையின் பின்னர் சீனன் கோட்டை பகுதி பள்ளிவாசல்கள், ஸாவியாக்கள் மற்றும் இஹ்வான்களின் வீடுகளில் தொடர்ச்சியாக ஓதப்பட்டு வந்த புனித ஸப்ஹான மௌலிதின் தமாம் மஜ்லிஸம், மஃரிப் தொழுகையின் பின்னர் வழீபா யாகூதிய்யாவும் இஷாத் தொழுகையின் பின்னர் ஹழரா திக்ர் மஜ்லிஸ_ம் அதனைத் தொடர்ந்து விஷேட மார்க்கச் சொற்பொழிவும் இடம் பெறும்.

சங்கைமிகு ஸாதாத்மார்கள், சேஷ்மார்கள், கலீபதுஷ் ஷாதுலி அஸ் ஸெய்யித் அலவி ஸாலிஹ் மௌலானா (அல் முர்ஸி), கலீபாக்கள், உலமாக்கள் சீனன் கோட்டை பள்ளிசங்கத் தலைவர் ஏ.எச்.எம் முக்தார் ஹாஜியார் உட்பட உறுப்பினர்கள், அல் மிர்அதுஷ் ஷாதுலிய்யா ஸாவியா நிர்வாகிகள், கலீபதுஷ் ஷாதுலிகளான மௌலவி எம்.ஐ.எம் ரபீக் (பஹ்ஜி) மௌலவி எம்.ஐ.எம் பாரூக் (மக்கி), மௌலவி எம்.ஜே.எம் பஸ்லான் (அஷ்ரபி – பு.ஏ) ரயீஸுமுகத்தமுஸ் ஷாதுலி மௌலவி எம்.டப்லியு.எம் பஹ்ருத்தீன் (மிஸ்பாஹி) சீனன் கோட்டை பள்ளிவாசல்கள் மற்றும் ஸாவியாக்களின் இமாம்கள், சீனன் கோட்டை ஜாமியதுல் பாஸியதுஷ் ஷாதுலி கலாபீட அதிபர் மௌலவி எம். அஸ்மிகான் (முஅய்யிதி), விரிவுரையாளர்கள், மாணவர்கள் உட்பட ஊர் ஜமாஅத்தார்கள் இம்மஜ்லிஸில் பங்குபற்றுவர்.
ஷாதுலிய்யா தரீக்காவின் உலக ஆன்மீகத் தலைவர் சங்கைக்குறிய சேஹ_ ஸஜ்ஜாதா அஷ் ஷெய்க் முஹம்மத் மஃதி அப்துல்லா அல் பாஸி அல் மக்கி அஷ் ஷாதுலி அவர்களினதும் இலங்கைக்கான ஷாதுலி தரீக்காவின் கலீபதுல் குலபா சங்கைக்குறிய அல் உஸ்தாத் மௌலவி அல் ஹாஜ் எம்.இஸட். முஹம்மத் ஸர் (பாரி) ஆகியோரின் அனுமதியுடன் இந்த மஜ்லிஸ் இடம்பெறுவது இங்கு குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆகஸ்ட் 23ஆம் திகதி அதிகாலை வலீபா யாகூதிய்யா மற்றும் ஹழரா (திக்ர்) மஜ்லிஸுடன் புஹாரி பராயண நிகழ்வு ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வருகிறமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

தென் இந்தியா அதிகாரம் பட்டிணத்தைச் சேர்ந்த ஆத்மீக ஞானி அஷ் செய்ஹ் சேகுனா அப்பா (ரஹ்) அவர்கள் இந்த புனித மஜ்லிஸை இற்றைக்கு 93 ஆண்டுகளுக்கு முன் இந்த ஸாவியாவில் ஆரம்பித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
சீனன் கோட்டை பள்ளிச் சங்க தலைவர் ஏ.எச்.எம் முக்தார் ஹாஜியார் தலைமையிலான பள்ளிச் சங்கத்தின் வழிகாட்டலின் கீழ் இதற்கான ஏற்பாடுகளை மேற்படி ஸாவியா நிர்வாகக் குழு மேற்கொண்டு வருவதாக பள்ளிச்சங்க இணைச் செயலாளர்களான எம்.எம்.எம் சிஹாப் ஹாஜியார், கலீபதுஷ் ஷாதுலி அஷ் ஷெய்க் இஹ்ஸானுத்தீன் அபுல் ஹஸன் (நளீமி) ஆகியோர் தெரிவித்தனர்.

(பேருவளை பீ.எம் முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *