வடமத்திய மாகாணத்தில் உள்ளூராட்சி வார நிகழ்வுகள்.
2025 செப்டம்பர் 15 முதல் 21 வரை நாடளாவிய ரீதியில் நடைபெறும் மறுமலர்ச்சி நகர்ப்புற உள்ளூராட்சி வாரத்துடன் இணைந்து வடமத்திய மாகாண பிராந்திய விழா அனுராதபுரம் கிழக்கு நுவரகம் பிரதேச சபையில் வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச தலைமையில் நடைபெற்றது.
இதன் கீழ் 07 நாட்களுக்கு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன.நிகழ்ச்சிகளின் தொடக்க விழா 15 ஆம் திகதி நடமாடும் சேவை தினமாகும் , 16 ஆம் திகதி சுற்றுச்சூழல் மற்றும் மரம் நடும் தினமாகும், 17 ஆம் திகதி சுகாதார தினம் , 18 ஆம் திகதி வருமான மேம்பாட்டு தினம் , 19 ஆம் திகதி கல்வி மற்றும் நூலக தினம் , 20 ஆம் திகதி பொதுப் பயன்பாடுகள் மற்றும் விளையாட்டு தினம் , 21 ஆம் திகதி இறுதி நாள் சான்றிதழ் வழங்குதல் மற்றும் கலாச்சார விழா என்பன நடைபெறும்.இதற்கு இணைவாக 50 கர்ப்பிணி தாய் மார்களுக்கு ஊட்டச்சத்து உணவு பொதிகள் வழங்கப்பட்டதுடன் அவர்களுக்கு ஆலோசனை திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டன.
இதன் போது பிரதேச செயலாளர்கள் , கிழக்கு நுவரகம் பிரதேச சபை தலைவர் குமுது பிரியந்த குணவர்தன அதன் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)