உள்நாடு

பெருந்தலைவர் மர்ஹும் அஷ்ரபின் 25 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் முழக்கம் ஏ.எல்.அப்துல் மஜீதின் நூல் வெளியீடும்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நடத்தும் பெருந்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 25 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு “தோப்பாகிய தனிமரம்” எனும் தொனிப்பொருளில் நாளை (16) செவ்வாய்க்கிழமை மாலை 04 மணிக்கு நிந்தவூர் கமு/அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் காஸிமி கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பைஸல் காசிம் வரவேற்புரை நிகழ்த்துவதோடு, முஸ்லிம் முழக்கம் மர்ஹும் ஏ.எல்.அப்துல் மஜீத் அவர்களின் “ஓயாத புயலும் சாயாத மரமும்” எனும் நூலும் வெளியீட்டு வைக்கப்படவுள்ளது.

இந் நூலினை பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ் நூலாய்வு செய்கிறார்.முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் நிகழ்வில் நினைவுப் பேருரை நிகழ்த்துவதோடு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் நிகழ்வுரை நிகழ்த்துகிறார்.

பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிஸாம் காரியப்பர் ஏற்புரை வழங்குகிறார்.இந்நிகழ்வில் நூல் வெளியீடு, விவரணப்படம், நினைவேந்தல் பாடல், துஆப் பிரார்த்தனை உட்பட மேலும் பல நிகழ்வுகளும் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *