புறக்கோட்டை மத்திய பேருந்து நிலைய புனரமைப்பு பணிகள் இன்று ஆரம்பமாகிறது
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் புறக்கோட்டை மத்திய பேருந்து நிலைய புனரமைப்பு பணிகள் இன்று (15) காலை ஆரம்பமாகவுள்ளது.
1964 ஆம் ஆண்டு கட்டப்பட்ட புறக்கோட்டை பேருந்து நிலையம் சுமார் ஆறு தசாப்தங்களுக்கு பின்னர் முழுமையாக புனரமைக்கப்படவுள்ளது.
இதற்காக ரூபாய் 424 மில்லியன் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இப் புதுப்பித்தல் திட்டத்தின் கீழ் புதிய கழிப்பறைகள், தகவல் மற்றும் தொடர்பு மையங்கள், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் பல நவீன வசதிகள் உள்ளடங்கவுள்ளன.
இந்தப் புனரமைப்பு பணிகள் இலங்கை விமானப் படையினரால் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மருதானை ரயில் நிலையத்தின் புனரமைப்பு பணிகளும் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.