மக்கொனை பவ்ஸி ஹாஜியார் மறைவுக்கு இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் அனுதாபம்
மக்கொனை பிரபல இரத்தினக்கல் வர்த்தகரும் முன்னனி சமூக சேவையாளருமான மக்கொனை சமாதான நீதிவான் ஏ.எஸ்.எம்.பவ்ஸி ஹாஜியாரின் திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேர் இளப்பாகும் என முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் தனது செய்தியில் மேலும் கூறியுள்ளதாவது மர்ஹூம் பவ்ஸி ஹாஜியார் சுமார் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக பேருவளை பகுதியிலும் களுத்துறை மாவட்டத்திலும் சமூகப் பணிகளில் துடிதுடிப்போடு செயல்பட்டார்.களுத்துறை மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னனிகள் சம்மேளனத்தில் ஆரம்ப காலம் முதல் பல்வேறு பதவிகளை வகித்த அவர் பின்னர் அதன் தலைவராகவும் பதவி வகித்து பாரிய சமுதாய பணிகளை மேற்கொண்டார். மக்கொனை இந்திரிலிகொடையில் அலவியா தரீக்காவின் ஆன்மீகத் தலைவர் காலஞ்சென்ற அஷ்ஷெய்க் ஹம்ஸா ஆலிம் அவர்களின் ஞாபகார்த்தமாக வீடமைப்புக் கிராமம் ஒன்றை உருவாக்கியதில் காலஞ்சென்ற பவ்ஸி ஹாஜியாரின் பங்களிப்பு மகத்தானது.
எனது தந்தையினதும் எனதும் அரசியல் வெற்றிக்காக மிக தீவிரமாக உளைத்த மர்ஹூம் பவ்ஸி ஹாஜியாரின் திடீர் மறைவு பேருவளை பகுதிக்கும் குறிப்பாக களுத்துறை மாவட்டத்திற்கும் ஈடு செய்ய முடியாத ஓர் பேரிழப்பாகும் அவர் நோய்வாய்ப்பட்ட நிலையிலும் கடைசி மூச்சு வடை மாவட்ட முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்காக உழைப்பவராக இருந்தார்.
இரத்தினக்கல் வர்தகரான அவர் இரத்தினக்கல் வர்த்தகத்தில் நீதியான வியாபாரியாகவும் திகழந்த அவர் அதன் மூலம் புகழ் பெற்றவராக விளங்கினார்.
சமூக உணர்வு,பிறருக்கு உதவி செய்யும் மலச்சுபாவம் கொண்ட அவர் மக்கொனைப் பகுதியில் சிங்கள முஸ்லிம் இன ஒற்றுமைக்காக அயராது பாடுபட்டவராவார்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அவரின் சமுதாய பணிகளை அங்கீகரித்து பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் பிர்தவ்ஸ் சுவர்க்கம் கிடைக்கச் செய்வானாக ஆமீன்.
(பேருவளை பீ.எம்.முக்தார்)