தேசிய அணிக்கு நாச்சியாதீவிலிருந்து இருவர் தெரிவு
இன்று (15) ஆரம்பமாகவிருக்கின்ற சாப் நாடுகளுக்கு இடையிலான 17 வயதுக்கு குறைந்தவர்களுக்கானஉதைப்பந்தாட்ட போட்டியில் விளையாடுவதற்காக தெரிவு செய்யப்பட்ட வீரர்களில் நாச்சியாதீவை சேர்ந்த இருவர் உள்வாங்கப்பட்டுள்ளார்கள்.
நாச்சியாதீவைச் சேர்ந்த எம்.எஸ். ஹாலிக் மற்றும் எம்.ஆர். ரகான் ஆகிய இருவரும் இவர்கள் நாச்சியாதீவு முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் மாணவர்களும் அனுராதபுரம் Solids விளையாட்டு கழகத்தின் வீரர்களுமாவார்கள்.
நாச்சியாதிவிலிருந்து தேசிய அணிக்கு தெரிவு செய்யப்பட்ட முதலாவது வீரர்களாக. இவர்களது பெயர் பதியப்படுகின்றது. இவ்விளம் வீரர்கள் இருவரும் திறமை மிக்கவர்கள் மாத்திரமல்ல மிகவும் நுட்பமாக விளையாட கூடியவர்கள.
இவர்கள் எமது இலங்கை தேசிய உதைப்பந்தாட்ட அணிக்கு சிறந்த பொறுப்பேற்றினை பெற்றுக் கொடுப்பதற்கு தமது திறமையை பயன்படுத்துவார்கள் என தான் நம்புவதாக பயிற்றுவிப்பாளர் சஹீல் அஹமட் நம்பிக்கை தெரிவித்தார்.
