உள்நாடு

பஸ்களை அலங்கரிக்கும் சுற்று நிருபம் இரத்துச் செய்யப்பட்டது

பஸ்களை அலங்கரிப்பதற்கும் மேலதிக பாகங்களை பொருத்துவதற்கும் சட்ட அனுமதிகளை வழங்கி வெளியிடப்பட்ட சுற்றுநிருபம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது.

மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்கவின் கையொப்பத்துடன் 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 02 ஆம் திகதி இந்த சுற்றுநிருபம் வௌியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த 09 ஆம் திகதியுடன் அமுலாகும் வகையில் அந்த சுற்றுநிருபம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பஸ்களை அலங்கரிக்க அனுமதி கோரி பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை கருத்திற்கொண்டு, பஸ்களில் அலங்காரங்கள் மற்றும் மேலதிக பாகங்களை நிறுவுவது தொடர்பான பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு குறித்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *