கண்டி வத்தேகம முன்னாள் நகர சபைத் தலைவர் கைது
கண்டி மெனிக்ஹின்ன பகுதியில் வத்தேகம நகர சபையின் முன்னாள்தலைவர் ரவீந்திர பண்டாரவும் மற்றொரு நபரும் இரண்டு ஜீப் வண்டிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து வந்த விஷேட பொலிஸ் குழுவினரே இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்
, சட்டவிரோதமாக வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டு, மாற்றியமைக்கப்பட்டு, மோட்டார் போக்குவரத்துத் துறையில் பொய்யாகப் பதிவு செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
(ரஷீத் எம். றியாழ்)