வரக்காபொலையில் மீலாதுன் நபி பரிசளிப்பு விழா
வரக்காபொல வலய அஹதியா பாடசாலைகள் சம்மேளனமும் வரக்காப்பொலை மஸ்ஜித் சம்மேளனமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மீலாதுன் நபி பரிசளிப்பு விழா எதிர்வரும் 14.09.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு வரக்காபொலை பாபுல் ஹஸன் மத்திய கல்லூரி வளவில் இடம்பெறும்.
வரக்காபொலை வலய அஹதியா பாடசாலைகள் சம்மேளன தலைவர் அல்ஹாஜ் எம்.எம்.எம்.ஆமிர் தலைமையில் நடைபெறும் விழாவில் பிரதம அதிதியாக ஹாஷிம் உமர் பௌண்டேஷன் ஸ்தாபக தலைவர் புரவலர் ஹாஷிம் உமர் கலந்து கொள்வார்.
விஷேட அதிதிகளாக கேகாலை மாவட்ட தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் மனோஜ் ராஜபக்ஷ வரக்காப்பொலை பிரதேச சபை தலைவர் சந்தன எதிரிசிங்க வரக்காப்பொலை பிரதேச செயலாளர் ரங்கன சஜீவ பாபுல் ஹஸன் மத்திய கல்லூரி அதிபர் ஜே.எம்.ராபில் வரக்காபொலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.பி சி.பிரஸாத் பிரதேச சபை உறுப்பினர்களான றிஸ்மின் ஆமிர் எம்.பி.எம்.ஷரீப் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என வரக்காபொலை வலய அஹதியா சம்மேளன செயலாளர் முனீப் நியாஸ் தெரிவித்துள்ளார்.
(சித்தீக் ஹனிபா)