புத்தளம் கஜூவத்தை முஸ்லிம் அரசினர் வித்தியாலயத்தில் மீலாத்துன் நபி விழா
2025 ஆம் ஆண்டுக்கான மீலாத் விழா நிகழ்வுகள் புத்தளம் கஜூவத்தை முஸ்லிம் அரசினர் வித்தியாலயத்தில் பாடசாலையின் அதிபர் அஷ்ஷெய்க் இஸட். ஏ சன்ஹீர் தலைமையில் வியாழக்கிழமை ( 11) இடம்பெற்றது.
பாடசாலை மாணவர்களின் கலை கலாசார நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடைபெற்ற மீலாத் விழாவில் மூத்த ஆசிரியர் திரு. நயீம் மௌலானா அவர்களின் சிறப்புரை இடம்பெற்றதுடன் நிகழ்வின் நெறிப்படுத்தலை சிரேஷ்ட ஆசிரியர் திரு. ஹபீப்தீன் மேற்கொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.



(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)