நேபாளத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா தலைமையில் இடைக்கால அரசு
நேபாளத்தில் கடந்த சில நாட்களாகவே வன்முறை தொடர்ந்து வருகிறது. இதனால் அங்கு நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டே போகிறது. இதற்கிடையே அந்நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்க்கி தலைமையில் அங்கு இடைக்கால அரசு அமையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.. போராட்டக்காரர்களின் ஆதரவு சுஷிலா கார்க்கிக்கு இருப்பதால், அங்கு வன்முறை மெல்ல முடிவுக்கு வரும் எனத் தெரிகிறது.