உள்நாடு

சீனன்கோட்டை பத்ஹ் ஸாவியா பள்ளியில் வருடாந்த மீலாத் நிகழ்வுகள் இன்று

பேருவளை சீனன் கோட்டை இப்ராஹிம் ஹாஜியார் மாவத்தை பத்ஹ் ஸாவியா பள்ளிவாசளில் வருடாந்த மீலாதுன் நபி விழாவும் ஸுப்ஹான மௌலித் மஜ்லிஸும் இன்று 11 ஆம் திகதி மாலை சீனன் கோட்டை பள்ளிச் சங்க இணைச் செயலாளரும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையும் நிறைவேற்று குழு உறுப்பினருமான கலீபதுஷ் ஷாதுலி அஷ் ஷெய்க் இஹ்ஸானுத்தீன் அபுல் ஹஸன் (நழீமி) தலைமையில் நடைபெறவுள்ளது.

பிரபல இஸ்லாமிய மார்க்க அறிஞர் அல் உஸ்தாத் மௌலவி அல்ஹாஜ் முஹம்மத் ஸபி ( பாதிபீ ) .
விஷேட உரை நிகழ்த்துவார்.

அஸர் தொழுகையைத் தொடர்ந்து ஸுப்ஹான மௌலித் மஜ்லிஸ் பள்ளிவாசல் இமாம்களான மௌலவி முஹம்மத் முஸ்னி (இர்ஷாதி) மௌலவி முஹம்மத் லியா உல் ஹக் (பாரி )ஆகியோர் தலைமையில் ஆரம்பமாகும்.

இம் மஜ்லிஸில் கலீபதுஷ் ஷாதுலிகளான அல் ஹாஜ் அஷ் ஷெய்க் இஹ்ஸானுத்தீன் அபுல் ஹஸன் (நளீமி), மௌலவி எம்.எம்.எம் ஸைனுல்ஆப்தீன் (பஹ்ஜி), மௌலவி அல் ஹாஜ் எம்.ஐ.எம் ரபீக் (பஹ்ஜி), மௌலவி எம்.ஐ.எம் பாரூக் (மக்கி), மௌலவி எம்.ஜே.எம் பஸ்லான் (அஷ்ரபி – பீ ஏ) ஆகியோர் ஹழரா மஜ்லிஸை நடாத்தி வைப்பர்.
அஸர் தொழுகையைத் தொடர்ந்து ஸுப்ஹான மௌலித் மஜ்லிஸ் பள்ளிவாசல் இமாம்களான மௌலவி முஹம்மத் முஸ்னி (இர்ஷாதி) மௌலவி முஹம்மத் லியா உல் ஹக் (பாரி )ஆகியோர் தலைமையில் ஆரம்பமாகும்.

(பேருவளை பீ.எம் முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *