அ.இ.ஜ.உலமா புத்தளம் கிளையின் ஏற்பாட்டில் போதை ஒழிப்பு தொடர்பான கலந்துரையாடல்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக்கிளையின் ஏற்பாட்டில் புத்தளம் பெரிய பள்ளி நிர்வாகம் சர்வமத குழு உறுப்பினர் புத்தளம் மாநகர சபையின் பிரதி மேயர் மற்றும் உறுப்பினர்கள் புத்தளம் பிரதேச சபையின் உறுப்பினர்கள் முள்ளிபுரம் பகுதியிலுள்ள எட்டு மஸ்ஜித்களின் (அல்அமீன், குபா,பாரி,நாகூர், ஆயிஷா, வாஹித், தாரிக் மற்றும் அல்அக்ஸா) நிர்வாக உறுப்பினர்கள் மீனவர் சங்கங்கள் சமூக பாதுகாப்பு அமைப்பு மற்றும் சிவில் சமூக அமைப்பு தாரிக் ஜனாஷா சங்கம் இணைந்து ஜம்இய்யாவின் காரியாலயத்தில் நேற்று 10.09.2025 காவல்துறை தலைமை அதிகாரி (HQI) H.N.D. குலத்துங்கவுடன் போதை அற்ற சமூகத்தை உறுவாக்க வேண்டும் எனும் தலைப்பில் கலந்துறையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வை சர்வமத குழு உறுப்பினர் அஷ்ஷேக் முஜீப் கபூரி தொகுத்தார். ஜம்இய்யாவின் செயலாளர் அஷ்ஷேக் அஸீம் ரஹ்மானியின் கிராஅத்தை தொடர்ந்து நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டன.
அதனை தொடர்ந்து தலைவர் அஷ்ஷேக் ஜிப்னாஸ் மிஸ்பாஹியினால் தலைமை உரை நிகழ்த்தப்பட்டது.
அதன் பின்னர் காவல்துறை தலைமை அதிகாரி H.N.D.குலத்துங்கவினால் போதையற்ற சமூகத்தை உறுவாக்க மஸ்ஜித் நிர்வாகம் மற்றும் புத்தளம் தலைமைத்தும் எவ்வாறு நடக்க வேண்டும் என்ற அடிப்படையில் வழிகாட்டல் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து மாநகர சபையின் பிரதி மேயர் நுஸ்கி நிஷாரினால் போதையற்ற சமூகத்தை உறுவாக்க அரசியல் ரீதியாக பல உதவிகளையும் மேல் அதிகாரிகளை சந்தித்து பேசுவதற்க்கும் ஏற்பாடுகள் செய்யப்படும் என்பதை கூறினார்.
அதன் பின்னர் மஸ்ஜித் நிர்வாகிகளும் சமூக நலன்விரும்பிகளும் பல கருத்துகளை தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து தொடர்ச்சியாக புத்தளம் சமூகத்திற்கு பல சேவைகளை செய்து கொண்டு வரும் கவல்துறை தலைமை அதிகாரி H.N.D.குலத்துங்கவுக்கு ஊர்தலைமைகள் ஒன்றாக நினைவுச்சின்னம் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து நன்றியுரை செயலாளர் அஷ்ஷேக் அஸீம் ரஹ்மானியினால் தெரிவிக்கப்பட்டது.
கப்பாரத்துல் மஜ்லிஸ் துஆவுடன் கூட்டம் முடிவடைந்தது.
எடுக்கப்பட்ட முடிவுகள்
- முக்கூட்டு தலைமையும் இணைந்து காவல்துறை அதிகாரிகளை சந்தித்தல்
(சிவில் ஆரக்ஸாவே உறுதி படுத்தல் தேவை ஏற்படின் எண்ணிக்கை அதிக படுத்தல்) - முக்கூட்டு தலைமையும் இணைந்து வழக்கறிஞர்களை சந்தித்தல்
- அதிகாலை நேரங்கள் மாலை நேரங்களில் பொலிஸ் அதிகாரிகள் ஊரை சுற்றுதல்
- தேவை ஏற்படின் சோதனை இடங்களை அமைத்தல்
- பாரளுமன்றத்திற்கு ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரகிளை பெரிய பள்ளி மற்றும் சர்வமத குழுவின் ஊடாக ஒரு Proposal தயாரித்து ஒப்படைத்தல்.





ஊடகப்பிரிவு
அ.இ.ஜ.உ
புத்தளம் நகரக்கிளை