ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை ரத்து செய்தல் சட்டமூலம் நிறைவேற்றம்..!
ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலத்தின் 2வது வாசிப்பு விவாதம் மீதான வாக்கெடுப்பு சற்று முன்னர் இடம்பெற்றது.
இந்த வாக்கெடுப்பில் பிரேரனைக்கு ஆதரவாக 151 வாக்குகளும், எதிராக 1 வாக்கும் அளிக்கப்பட்டன.
இதன்படி ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலம் 150 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது.
நேற்றைய தினம் இது தொடர்பான விவாதம் இடம்பெறவிருந்தது.
எனினும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இன்று முற்பகல் 11.30 முதல் பிற்பகல் 3.30 மணி வரையான காலப்பகுதியில் குறித்த விவாதம் இடம்பெற்றிருந்தது.
இறுதியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தது.