குட்டிமலை ஜெலாலிய்யா பள்ளியில் மீலாதுன் நபி நிகழ்வு
பேருவளை சீனன் கோட்டை குட்டிமலை ஜலாலிய்யா தர்கா பள்ளிவாசளில் வருடாந்த மீலாதுன் நபி விழாவும் ஸப்ஹான மௌலித் மஜ்லிஸம் சீனன் கோட்டை பள்ளிச் சங்க இணைச் செயலாளரும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையும் நிறைவேற்று குழு உறுப்பினருமான கலீபதுஷ் ஷாதுலி அஷ் ஷெய்க் இஹ்ஸானுத்தீன் அபுல் ஹஸன் (நழீமி) தலைமையில் நடைபெற்றது.
தென் இந்தியா மேலப்பாளையம் உஸ்மானிய்யா அரபுக் கல்லூரி முதல்வரும் பிரபல இஸ்லாமிய மார்க்க அறிஞருமான அல் உஸ்தாத் மௌலவி அல்ஹாஜ் எஸ்.எஸ்.ஹைதர் அலி (மிஸ்பாஹி) விஷேட உரை நிகழ்த்தினார்.
அஸர் தொழுகையைத் தொடர்ந்து ஸ_ப்ஹான மௌலித் மஜ்லிஸ் பள்ளிவாசல் இமாம்களான மௌலவி முகத்தமுஷ் ஷாதுலி எம்.டப்லியு.எம் பஹ்ருத்தீன் (மிஸ்பாஹி), மௌலவி முஹம்மத் இக்ராம் (நுலாரி) ஆகியோர் தலைமையில் ஆரம்பமானது.
(பேருவளை பீ.எம் முக்தார்)