உடற்கல்வி ஆலோசகருக்கு சேவை நலன் பாராட்டு
கண்டி கல்வி மாவட்டத்தில் சுமார் 34 ஆண்டுகளாக ஆசிரரியராகவும் உடற் கல்வி ஆசிரிய ஆலோசகராகவும் பணியாற்றி ஓய்வு பெற்ற எம் ஆர் எம் ரிஸ்னியை கண்டி கல்வி வலயம் பாராட்டி கௌரவித்தது.
இந்நிகழ்வு நேற்று (9) கண்டி கட்டுகஸ்தோட்டை ஸாஹிரா கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கண்டி மாவட்டத்தில் பல்வேறு கல்வி வலயங்களில் ஆசிரியராகவும் கண்டி கல்வி வலயத்தில் சுமார் 15 ஆண்டு காலமாக ஆசிரிய ஆலோசகராகவும் கடமையா ற்றி 34ஆண்டுகால சேவையின் பின்னர் ஓய்வு பெறும் எம் ஆர் எம் ரிஸ்னி ஆசிரியரே இவ்வாறு கௌரவிக்கப்பட்டார்
கண்டி கல்வி வலய கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு எஸ் தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கண்டி வலயத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஏ ஆர் எஃப் அமீன், உதவி கல்வி பணிப்பாளர் எஸ் எஸ் ரமேஷ்பாபு ,உட்பட கண்டி வலயத்தின் சார்பில் வி. சுகுமார் ரதி தேவசுந்தரம் கே.பிரபாகரன் எம். ஜி நூருல்லாஹ் சசிகலா செல்லதுரை உட்பட ஆசிரிய ஆலோசகர்கள் வளவாளர்கள் பலரும் இங்கு சேவை நலன் பாராட்டுரைகளை நிகழ்த்தினர்
சாஹிரா கல்லூரியின் அதிபர் சட்டத்தரணி பைசால் முஹம்மத் உட்பட கண்டி கல்வி திணைக்களத்தின் ஆசிரிய ஆலோசர்கள் வளவாளர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர் .
உடற்கல்வி ஆசிரிய ஆலோசகராகவும் விளையாட்டுத்துறை பயிற்றுவிப்பாளராகவும் சுமார் 34 ஆண்டு காலம் பணியாற்றிய ரிஸ்னி பல்வேறு தங்க பதக்கங்களையும் தேசிய ரீதியான விருதுகளையும் பெற்றவராவார்.
(ரஷீத் எம். றியாழ்)