சீனன் கோட்டை நவ்பல் ஜாபிர் மாவத்தை இப்றாஹீமிய்யா ஷாதுலிய்யா ஸாவியாவில் வருடாந்த மீலாதுன் நபி விழாவும் ஸுப்ஹான மௌலித் மஜ்லிஸும்
பேருவளை சீனன் கோட்டை நவ்பல் ஜாபிர் மாவத்தை இப்றாஹீமிய்யா ஷாதுலிய்யா ஸாவியாவில் வருடாந்த மீலாதுன் நபி விழாவும் ஸ_ப்ஹான மௌலித் மஜ்லிஸும் 08 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை சீனன் கோட்டை பள்ளிச் சங்க இணைச் செயலாளரும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையும் நிறைவேற்று குழு உறுப்பினருமான கலீபதுஷ் ஷாதுலி அஷ் ஷெய்க் இஹ்ஸானுத்தீன் அபுல் ஹஸன் (நளீமி) தலைமையில் நடைபெறும்.
அஸர் தொழுகையைத் தொடர்ந்து ஸுப்ஹான மௌலித் மஜ்லிஸ் ஸாவியா இமாம்களான மௌலவி முஹம்மத் அமீன் (அல் பாஸி) , முஹம்மத் அன்வர் (அஜ்வாதி) ஆகியோர் தலைமையில் ஆரம்பமாகும்.
தென் இந்தியா மேலப்பாளையம் உஸ்மானிய்யா அரபுக் கல்லூரி முதல்வரும் பிரபல இஸ்லாமிய மார்க்க அறிஞருமான அல் உஸ்தாத் மௌலவி அல்ஹாஜ் எஸ்.எஸ்.ஹைதர் அலி (மிஸ்பாஹி) விஷேட சொற்பொழிவாற்றுவார்.
இம் மஜ்லிஸில் கலீபதுஷ் ஷாதுலிகளான அல் ஹாஜ் அஷ் ஷெய்க் இஹ்ஸானுத்தீன் அபுல் ஹஸன் (நளீமி), மௌலவி எம்.எம்.எம் ஸைனுல்ஆப்தீன் (பஹ்ஜி), மௌலவி அல் ஹாஜ் எம்.ஐ.எம் ரபீக் (பஹ்ஜி), மௌலவி எம்.ஐ.எம் பாரூக் (மக்கி), மௌலவி எம்.ஜே.எம் பஸ்லான் (அஷ்ரபி – பீ ஏ) ஆகியோர் ஹழரா மஜ்லிஸை நடாத்தி வைப்பர்.
(பேருவளை பீ.எம் முக்தார்)