கலாநிதி லுக்மானுல் ஹகீமின் குழந்தைகளின் நடத்தைக் கோலங்களும் வழி யொழுங்குகளும் நூல் வெளியீடு
கலாநிதி எம்.எம். லுக்மானுல் ஹகீம் குழந்தைகளின் நடத்தை கோலங்களும் வழியொழுங்குகளும் எனும் தலைப்பில் உளவியல் நுால் ஒன்றை நேற்றுமுன்தினம் 06.09.2025 கொழும்பு தபாலக கேட்போர் கூடத்தில் வெளியீட்டு வைத்தார்.
இந் நிகழ்வு எழுத்தாளர் இன்ஷாப் சலாஹூடீன் தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக யாழ் உளவியல் வைத்திய நிபுணர் டொக்டர் S. சிவதாஸ் அவர்கள் கலந்து கொண்டார்.
நுாலின் மதிப்புரையை உளவியலாளர் எம்.ஆர்.எம். நளீம் நிகழ்தினார் ஏற்புரையை கலாநிதி எம்.எம். லுக்மானுல் ஹக்கீம், நன்றியுரை பாத்திமா நுஸ்ரத் அனஸ் நிகழ்த்தினார்கள்.
நூலின் முதற் பிரதியை வைத்தியர் சிவதாசனம் மற்றும் உளவியல் சம்பந்தமான வைத்தியர்கள், மாணவர்கள். உளவியலாளர்கள் ஆசிரியர்கள் ஊடகவியலாளர்கள் பெற்றுக் கொண்டனர்.
கலாநிதி லுக்மான் அவர்கள் ஏற்கனவே குழந்தைகளின் நடத்தைகளும் உளவியல் வழிகாட்டல்களும் எனும் நுாலை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் அவரது அறிவு, அனுபவம் பின்னனியில் இரண்டாவது இந் நுாலையையும் தமிழ் மொழியில் வெளியிட்டுள்ளார். அத்துடன் வைத்தியசாலைகள் கல்வி நிறுவனங்களிலும் இத்துறையில் தமது விரிவுரை அனுபவத்தினை சேவையாற்றி வருவதையும் குறிப்பிடத்தக்கது.











(அஷ்ரப் ஏ சமத்)