எல்ல விபத்தில் இறந்தோர் இறுதிக் கிரியைகள் இன்று.

எல்ல பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் இறுதிக் கிரியைகள் இன்று (07) இடம்பெறவுள்ளது.எல்ல பேருந்து விபத்தில் 15 பேர் உயிரிழந்ததுடன், 18 பேர் காயமடைந்து தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
அத்துடன், பேருந்தின் சாரதி பேருந்தை செலுத்தும்போது மதுபானம் பயன்படுத்தியிருந்தாரா என்பதை அறிய அவருடைய இரத்த மாதிரிகள் இன்று மேலதிக பரிசோதனைக்காக அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பப்படவுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், பேருந்தின் பாகங்கள் நாளை அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்துக்கு அனுப்பப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.