உள்நாடு

இன்று வானில் தோன்றும் இரத்த நிலவு.

இன்றைய (7) தினம் வானில் அரிய வகை முழு சந்திரகிரகணம் தென்படவுள்ளது. இரத்த நிலவு (blood moon) என்று அழைக்கப்படும் இது, இந்த ஆண்டின் கடைசி முழு சந்திர கிரகணமாகும். 7 ஆண்டுகளின் பின் தோன்றும் குறித்த முழு சந்திர கிரகணம் 82 நிமிடங்கள் நிகழும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், நிலவு அடர் சிவப்பு நிறத்தில் காணப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை உட்பட உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 77% பேருக்கு இந்த சந்திர கிரகணத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே ஏற்படும் பல கிரகணங்களைப் போல் அல்லாமல், ஆசியா, அவுஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் இந்த கிரகணத்தை தௌிவாக அவதானிக்க முடியும். . சந்திர கிரகணம் நிகழும் நேரம் பின்வருமாறு, கிரகணம் ஆரம்பம் – இரவு 8:58 (செப்டம்பர் 7) பகுதி கிரகணம் ஆரம்பம் – இரவு 9:57 முழுமையான கிரகணம் – இரவு 11:01 அதிகபட்ச கிரகணம் – நள்ளிரவு 11:42 கங்கண கிரகணம் முடிவு – அதிகாலை 12:22 (செப்டம்பர் 8) பகுதி கிரகணம் முடிவு – அதிகாலை 1:26 கிரகணம் முடிவு – அதிகாலை 2:25

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *