ஸாதாத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் நால்வர் சித்தி

மாறை/ கொடபிடிய ஸாதாத் மகா வித்தியாலய நான்கு மாணவ செல்வங்கள் 2025 ஆம் ஆண்டு இம்முறை புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து பாடாசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
ஹன்பா பர்ஹான் – 156, நஷா நிப்ராஸ் – 150, ஸிzம்னா பைரூஸ் – 148, ஸபிய்யா அஸாம் – 139, ஆகிய மாணவச் செல்வங்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று பாடசாலைக்கும் ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார்கள்.
மேலும் 132 புள்ளிகள், 129 புள்ளிகள் பெற்ற 6 மாணவர்களும் இருப்தாக அதிபர் தெரிவித்தார். எல்லாம் வல்ல அல்லாஹ்வின் உதவியாலும் வகுப்பு ஆசிரியைகளான எம்.ஏ.ரிப்னா மற்றும் எம்.எப்.எப்.மியாஸா ஆகியோரின் அயராத முயற்சியினாலும் பாலர் பாடசாலை ஆசிரியர்கள், தரம் 1 முதல் தரம் 4 வரை கற்பித்த ஆசிரியர்கள் அனைவரினதும் ஒத்துழைப்போடும் பெற்றோர்களின் பாரிய பங்களிப்பினாலும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத்தோற்றிய 40 மாணவர்களுள் 32 மாணவர்கள் சித்தி அடைந்துள்ளனர்.இந்த வெற்றிக்குப் பங்களிப்புச் செய்த அனைவருக்கும் பாடசாலை சார்பாக எமது மனமார்ந்த நன்றிகளைத் அதிபர் H J M ரிகாஸ் தெரிவித்தார்.